மொடர்னா நிறுவனத்தின் 50 ஆயிரம் கொரோனா தடுப்பு மருந்துகள், இன்று ஒன்ராறியோவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்டமாக கொண்டு வரப்படும் இந்த மருந்துகள், நீண்டகால பராமரிப்பு மற்றும் ஓய்வாளர் தங்ககங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாகாணத்தின் தடுப்பு மருந்து திட்டத்துக்கு தலைமை தாங்கும் மேஜர் ரிக் ஹில்லியர் (Major Rick Hillier) தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து ஒன்ராறியோ உள்ளிட்ட நாடாளவிய ரீதியில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.