இலங்கை துறைமுக அதிகாரசபை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில், சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ், துறைமுக அதிகார சபையுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும், அத்தியாவசிய சேவையாக அறிவிப்பதாக சிறிலங்கா ஜனாதிபதியின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகப் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலேயே இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.