கொரோனா தடுப்பு மருந்தை வழங்குவதில் கியூபெக் மாகாணம் புதிய உத்தியைக் கையாளத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்தை ஒருவர் இரண்டு முறை போட்டுக் கொள்ள வேண்டும் என்பதால், விநியோகிக்கப்பட்ட மருந்துகளின் அளவில் பாதியையே பயன்படுத்துவதற்கு கியூபெக் சுகாதார அமைச்சு முன்னர் திட்டமிட்டிருந்தது,
எனினும் அதிகரித்து வரும் நோய்த் தொற்று மற்றும், பைசர் பயோஎன்டெக் நிறுவனம் வழங்கிய உத்தரவாதத்தை அடுத்து, இரண்டாவது முறை போடுவதற்காக பாதி மருந்தை ஒதுக்கி வைக்காமல் முழுவதையும் பயன்படுத்துவதற்கு கியூபெக் சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.
கியூபெக் மாகாணத்துக்கு இதுவரை 55 ஆயிரத்து 500 பைசர் தடுப்பு மருந்துகளும், 32 ஆயிரத்து 500 மொடேனா தடுப்பு மருந்துகளும் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், இதுவரை 29 ஆயிரத்து 250 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.