சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன சுகாதார அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று வெளியாகிய ஊடகச் செய்திகளை, சபாநாயகரின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.
இன்று தொடக்கம் சபாநாயகர் தனது வழமையான பணிகளை மேற்கொள்வார் என்று, அவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சபாநாயகரின் பாதுகாப்பு வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை அடுத்து, தற்காலிகமாக நியமிக்கப்பட்டகாவல்துறை அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட போதும், சபாநாயகரின் பாதுகாப்பு பிரிவில் உள்ள ஏனைய காவல்துறையினருக்கு தொற்று கண்டறியப்படவில்லை.
எனினும், சபாநாயகர் பாதுகாப்பு பிரிவில் உள்ள அனைத்து காவல்துறையினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், சபாநாயரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.