ஸ்கார்பாரோவில் உள்ள ஒரு நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் கொரோனா தொற்றினால் மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, இந்த இல்லத்தில் இடம்பெற்றுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆக அதிகரித்திருக்கிறது.
இந்த நீண்டகால பராமரிப்பு இல்லம் பல வாரங்களாக கொரோனா தொற்றினால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
பேரழிவு தரும் வைரஸால் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக, இந்த இல்லத்தை வீட்டை தற்காலிகமாக நிர்வகித்து வரும் நோர்த் யோர்க் பொது மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தற்போது இந்த இல்லத்தில் தங்கியுள்ள 78 பேர் தற்போது கொரோனா தொற்றுடன் இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அதேவேளை, நேற்று இந்த இல்லத்துக்கு வெளியே கூடிய உறவினர்கள் பலரும், தமது உறவுகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.