இன்று 2021ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் நாளாகும். தீநுண்மி நெருக்கடிகள் மிக்க 2020ஆண்டிலிருந்து விடுபட்டு புதிய மாற்றத்திற்கான எதிர்பார்ப்புடன் புதிய ஆண்டொன்றில் முழு உலகமுமே காலடி எடுத்து வைக்கின்றது.
கனடிய தமிழ் வானொலியுடன் இணைந்திருக்கும் அனைத்து அன்புக்குரிய நெஞ்சங்களுக்கும் எமது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
கனடிய தமிழ் வானொலியின் இருதாசப்தம் கடந்த பயணத்திற்கு ஆணிவேராக இருந்துகொண்டிருக்கும் விளம்பரதாரர்கள், பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய நேயர்கள், எமது இணைய வாசக்காகர்கள் உள்ளிட்ட அனைவரும் பக்கபலமாக இருக்கின்றார்கள்.
மலரும் இந்தப்புத்தாண்டிலும் அனைத்து உறகளும் தமது ஆதரவை தொடர்ந்தும் நல்குவார்கள் என்ற பெரு நம்பிக்கையை கனடிய தமிழ் வானொலி கொண்டிருக்கின்றது.
பூகோளம் எங்கும் அமைதியான, நெருக்கடியற்ற வாழ்வியல் உருவாகுவதற்கு இறைவனை கனடிய தமிழ் வானொலியும் வேண்டி நிற்கிறது.