தமிழ் சினிமாவில் 2020 ஆம் ஆண்டுக்கான தாதாசாஹேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
யாருமே எதிர்பாராத வகையில் இவ்வருடம் தமிழில் மூன்று முக்கிய நடிகர்கள் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளனர். இதில் முக்கியமாக நடிகர் அஜித்குமார் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனை அஜித் ரசிகர்கள் தற்போது கொண்டாடிவருகின்றனர்.
சிறந்த திரைப்பட விருது பிரிவில் டூலெட் படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 2020 ல் சிறந்த நடிகையாக நடிகை ஜோதிகா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
ராட்சசி திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தென்னிந்திய சினிமாவின் சிறந்த நடிகையாக தாதா சாஹேப் பால்கே விருது ஜோதிகாவுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் சிறந்த நடிகராக தனுஷ் தேர்வாகியுள்ளார். அசுரன் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுஷிற்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது.
அதே போல் தாதா சாஹேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதில் சிறந்த இசையமைப்பாளராக அனிருத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் .
மேலும் இந்தப் பிரிவில் அதிமுக்கியமாக பல்துறை நடிகருக்கான விருது நடிகர் அஜித்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2020 தமிழில் சிறந்த இயக்குனராக ஒத்த செருப்பு படத்தை இயக்கிய நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் .
மொத்தத்தில் தாதா சாஹேப் பால்கே விருதுக்கு தென்னிந்திய சினிமாவில் இருந்து முன்னணி நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.