கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குவதற்கு ஆஜென்ரீனாவில், நடத்தப்பட்டு வந்த 30 ஆண்டு கால போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.
ஆஜென்ரீனாவில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்க கோரி பெண்கள் அமைப்புகள், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன.
பெரும்பான்மையான கத்தோலிக்கர்கள் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பெண்கள் அமைப்புகளின் தொடர் போராட்டம், கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிசின் ஆதரவு ஆகியவற்றைத் தொடர்ந்து, ஆஜென்ரீன நாடாளுமன்றத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி, 14 வாரங்கள் வரையிலான கருக்கலைப்பு, பாலியல் பலாத்காரம், பெண்ணின் உடல்நிலைக்கு ஆபத்து உள்ளிட்ட சூழல்களில் கருக்கலைப்பு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.