2006ஆம் ஆண்டு இதேநாளில் திருகோணமலையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் இன்று முற்பகல், கட்சியின் பிரமுகர் ஸ்ரீ இராமநாதன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்ற இந்த நிகழ்வில் மூவர் மட்டும் பங்கெடுத்திருந்தனர். எனினும், சிறிலங்கா காவல்துறையினரும்,படையினரும் நிகழ்வை நிறுத்துமாறு அச்சுறுத்தியதாக, நிகழ்வு ஏற்பாட்டாளர் ஸ்ரீ இராமநாதன் தெரிவித்துள்ளார்