இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் சபைத் தலைவருமாறு சவ்ரவ் கங்குலி மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் அவரது வீட்டில் இருந்த போது, இன்று மதியம் 2 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சவுரவ் கங்குலிக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களில் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, கங்குலிக்கு இதய நாள அடைப்பை நீக்கும், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கங்குலியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும், அவர் அடுத்த 24 மணி நேரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் எனவும், அவர் முழு நினைவுடன் இருப்பதாகவும், குறித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
கங்குலியின் இதயத்தில் 2 அடைப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர் தகவல் வெளியிட்டுள்ளார்.