கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, திருகோணமலை மத்திய வீதி முடக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நகர பகுதியில் நேற்று எழுமாற்றாக நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வர்த்தக நிலையங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு ஆன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து சம்பத் வங்கி சந்தி வரை மத்திய வீதி, மூடப்பட்டுள்ளது.
சிறிலங்கா காவல்துறையினரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக குறித்த பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.