இந்த ஆண்டில் சிறிலங்கா படையினருடன் ரஷ்ய தரைப்படைகள் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டில் ரஷ்ய தரைப்படைகள் வெளிநாட்டுப் படைகளுடன் ஒன்பது இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளன.
சிறிலங்கா, அல்ஜீரியா, இந்தியா, பாகிஸ்தான், லாவோஸ், வியட்னாம் ஆகிய ஆறு நாடுகளுடன், இருத்தரப்பு பயிற்சிகளை ரஷ்ய படைகள் மேற்கொள்ளவுள்ளன.
அத்துடன், ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள நாடுகள், ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகள், கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பிலுள்ள நாடுகளுடன், பலதரப்பு கூட்டுப் பயிற்சிகளும் நடத்தப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைதி காப்பு மற்றும் தீவிரவாத முறியடிப்பு ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த கூட்டுப் பயிற்சிகளை ரஷ்யா நடத்தவுள்ளது.