போர்க்குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு எதற்காக அஞ்சுகின்றீர்கள் என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவிடத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தவைரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறிலங்கா படையினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. நாங்கள் விசாரணைக்கு அஞ்சவில்லை என்று கூறும் ஜெனரல் கமாலின் கருத்துக்களை நான் வரவேற்கின்றேன் என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
எம்மைப்பொறுத்தவரையில் இழைக்கப்பட்ட இனவழிப்புக்கு நியாயான நீதி வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களிற்குரிய நியாயம் விரைவில் கிட்ட வேண்டும் என்பதே நிலைப்பாடு அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்கா படைகள் போர்க்குற்றங்களை இழைக்கவில்லை என்றால் எதிர்வரும் மார்ச் மாத ஜெனிவா அமர்வில் சர்வதேச விசாரணைக்கு தயார் என்று பகிரங்கமாக வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பைச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதுமட்டுமன்றி சர்வதேசத்தின் பிரசன்னத்துடன் இடம்பெறும் விசாரணைகளுக்கு சிறிலங்கா படைகள் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் பகிரங்கமாக அறிவிப்பதோடு அதற்கான இடமளிப்புக்களையும் செய்ய வேண்டும் என்றார்.