அனைத்து அமைச்சுக்களினதும் அபிவிருத்தி திட்டங்களை மேற்பார்வை செய்வதற்கு, மூத்த இராணுவ அதிகாரிகளை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கமைய, ஒவ்வொரு அமைச்சுக்கு, மேலதிக செயலாளர் பதவியில், மூத்த இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு, 25 மாவட்டங்களுக்கும் 25 மூத்த இராணுவ அதிகாரிகள் கடந்தவாரம், இணைப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், மேலும் பல சிவில் பதவிகளுக்கு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளை நியமிப்பது குறித்தும், கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.