சட்டமன்ற அமைச்சர்களும், உறுப்பினர்களும் தற்போதைய காலகட்டத்தில் விடுமுறை நாட்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றமை பயங்கரமான செய்தியை வெளிப்படுத்துவதாக எட்மனில் உள்ள வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு வைத்தியர் ஷாஸ்மா மிதானி (Shazma Mithani) தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி அரசியல்வாதிகளின் இத்தகைய செயற்பாடுகள் ஏமாற்றத்தினையும் விரக்தியையும் வழங்குவதாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுசுகாதார சமூகப்பொறுப்பில் அரசியல்வாதிகள் மிக மோசமான முன்னுதாரணத்தினை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
கொரோனா தொற்றை தடுப்பதில் தானும், தன்னைப்போன்றவர்களும் அர்ப்பணிப்புடன் ஆற்றிவரும் செயற்பாடுகளை அற்பமாக்குவதாகவும் அரசியல்வாதிகளின் வெளிநாட்டு பயணங்கள் உள்ளதாக குறிப்பிட்டார்.