ஆல்பேர்ட்டாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
கிராண்டே ப்ரைரி (Grande Prairie) நகரிலிருந்து 100 கிலோமீற்றர் வடகிழக்கில் ஒரு பண்ணை வயலில் ரொபின்சன் ஆர் 44 என்ற ஹெலிகாப்டர் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் இரு பெரியவர்களும், இரு குழந்தைகளும் உயிரிழந்திருப்பதாகவும் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.