கனடாவிற்குள் பிரவேசிப்பவர்களுக்கான புதிய கொரோனா விதிகள் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி முதல் அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பான உத்தியோக பூர்வமான அறிவித்தல்கள் இன்னமும் வெளிப்படுத்தப்படாதபோதும், வானூர் நிறுவனங்களுக்கான சமஷ்டி அரசாங்கத்தின் அறிவிப்பில் அதுகுறித்த சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் விமானங்களில் பயணம் செய்பவர்கள் ஆசனங்களில் அமருவதற்கு முன்னதாக கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த பரிசோதனையானது, கனடாவிற்குள் பிரவேசிக்கும் போது மிகவும் கட்டாயமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.