கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும், புதுவருட விடுமுறை ஆகியவற்றை தொடர்ந்து கனடாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஜனவரி, மற்றும் பெப்ரவரி மாதங்களில் இந்த அதிகரிப்பு கணிசமாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்மஸ் பண்டிகைகளின்போதும், புத்தாண்டு விடுமுறைக்காலத்திலும் பொதுமக்களிடடையே குறிப்பிடத்தக்க அளவு பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை உறுதியாக கூற முடியும் என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டனர். அதன் பிரதிபலன்களை நிச்சயம் உணரமுடியும் என்றும், அதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்