தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினால் தமிழத்தின் முதல்வராக முடியாது என்று, மதுரையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் நடத்திய கூட்டத்தில், மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
“கருணாநிதியிடம் இல்லாததையும் பொல்லாததையும் கூறி என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள்.
எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை நான் தான், தி.மு.க.வின் கோட்டையாக மாற்றினேன்.
மதுரை எமது கோட்டை. அதை யாராலும் மாற்ற முடியாது
ஸ்டாலினால் ஒரு போதும் முதல்வராக வர முடியாது. அதற்கு என் ஆதரவாளர்கள் விடமாட்டார்கள்.
ஆனால், விரைவில் நல்ல முடிவு எடுப்பேன். நான் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்..” என்றும், மு.க. அழகிரி மேலும் கூறியுள்ளார்.





