யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயிரத்து 305 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 736 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.
“யாழ். மாவட்டத்தில் இன்றுவரை 160 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த 28 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகளை திறப்பது தொடர்பாக அடுத்தவாரம் இடம்பெறவுள்ள கொரோனா ஒழிப்பு குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திருகோணமலை நகரப் பகுதியில் கடந்த 12 மணித்தியாலங்களில் 13 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.