விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை (julian assange) அமெரிக்காவுக்கு நாடுகடத்த அனுமதிக்க முடியாது என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவுனரான, ஜூலியன் அசாஞ்சே (julian assange), அமெரிக்காவின் இரகசிய ஆவணங்களை பகிரங்கப்படுத்தியதையடுத்து, அவர் மீது 18 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவுக்கு எதிராக செயற்படும் உளவாளி என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் ஈக்வடோர் தூதரகத்தில் மறைந்திருந்த அசாஞ்சே, லண்டன் காவல்துறையினரால், கைது செய்யப்பட்ட நிலையில், அவரை, தங்களிடம் ஒப்படைக்கக்கோரி அமெரிக்கா பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்தநிலையில், அமெரிக்காவிடம் தன்னை ஒப்படைக்கக் கூடாது எனக் கோரி, லண்டன் நீதிமன்றில் அசாஞ்சே (julian assange) வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில், ஜூலியன் அசாஞ்சேவை (julian assange)அமெரிக்காவுக்கு நாடுகடத்த அனுமதிக்க மறுத்துள்ளது.
அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும், நீதிமன்றம் கூறியுள்ளது.