அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோர்ஜியாவின் உயர்மட்ட தேர்தல் அதிகாரியிடம் மாநில ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அவர் இணங்கவில்லை என்றால் ஒரு பெரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
ஜோர்ஜியாவின் வெளியுறவு அமைச்சர் பிராட், ராஃபென்ஸ்பெர்கருடன் (Brad Rafensper) ட்ரம்ப் ஒரு மணிநேரம் தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடல் ஒன்று கசிந்த நிலையில் அதனை ஆதாரம் காட்டி வொஷிங்டன் போஸ்ட் (Washington Post) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
வெளியான தேர்தல் முடிவுகளினால் ஜோர்ஜியா மக்கள் கோபத்தில் உள்ளதாகவும், தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை. அதனால் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்குமாறும் ட்ரம்ப், பிராட் ராஃபென்ஸ்பெர்கரிடம் (Brad Rafensper) இந்த உரையாடலில் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.