மட்டக்களப்பு மாநகரசபை பகுதிகளில் நான்கு நாட்களுக்குப் பின்னர், வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சுகாதார திணைக்களம் பரிந்துரைத்துள்ள நடைமுறைகளுக்கு அமைவாகவே, வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன் அறிவித்திருந்தார்.
அதேவேளை, காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், அந்தப் பகுதிக்குள் இருந்து வர்த்தகர்கள் எவரும் இன்று நகருக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இதனால் குறித்த பகுதிகளைச் சேர்ந்த வர்த்தகர்களின் கடைகள் மூடப்பட்டிருந்தன.
அதேவேளை, அனைத்து வியாபார நடவடிக்கைகளும் மாலை 7 மணியுடன் நிறுத்தப்பட வேண்டும்.” என்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் வங்கி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, வங்கி தற்காலிகமாக மூடப்பட்டு, 21 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.