யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணனை, இந்திய துணை தூதரகத்தின் மூத்த அதிகாரி கிருஷ்ணமூர்த்தி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இன்று காலை நடந்த இந்த சந்திப்பின் போது, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் உடனிருந்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது என்னென்ன விடயங்கள் குறித்துப் பேசப்பட்டன என்பது தொடர்பாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
யாழ்ப்பாண மாநகர முதல்வராக மணிவண்ணன் பொறுப்பேற்று ஒரு வாரத்துக்குள் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.