உருமாறிய புதிய கொரோனா வைரஸின் பரவலை தடுப்பதற்குரிய மிக இறுக்கமான பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சதாரணமாக இரண்டு மீற்றர் இடைவெளி, முககவசம் உள்ளிட்ட விடயங்களுக்கு அப்பால் மேலும் சில விதிமுறைகள் அவசியமாக உள்ளதாக கூறப்படுகின்றது.
புதிய வகை கொரோனாவானது, வீரியம் மிக்கதாக உள்ளதன் காரணமாக பல்வேறு விதமான சுகாதாரபாதுகாப்புக்கள் அவசியமாக உள்ளது என்றும் பொதுசுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.