தைப்பூச திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 28ஆம் திகதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், இனிவரும் ஆண்டுகளில் அனைத்து தைப்பூச திருவிழாவையும் பொதுவிடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத்திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.