ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில், நிரந்தரமற்ற அங்கத்துவத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நோர்வே ஏற்றுள்ளது.
இதனூடாக இந்தியா, அயர்லாந்து, கென்யா மற்றும் மெக்ஸிகோ ஆகிய இதர நிரந்தரமற்ற அங்கத்துவத்தைக் கொண்ட நாடுகளுடன் நோர்வே இணைந்துள்ளது.
ஆத்துடன் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரையில் தனது நிரந்தரமற்ற உறுப்புரிமையை நோர்வே கொண்டிருக்கும்.
நேர்வே, 2001முதல் 2002வரையில் காலப்பகுதியில் பாதுகாப்பு சபையில் இறுதியாக அங்கம் வகித்திருந்ததைத் தொடர்ந்து, இருபது ஆண்டுகளின் பின்னர் தற்போது இந்த அங்கத்துவத்தை ஏற்றுள்ளது.
ஐந்து நிரந்தர அங்கத்தவர்களான அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய இராஜ்ஜியம், சீனா மற்றும் ரஷ்யா ஆகியவற்றுக்கு மேலதிகமாக, பாதுகாப்பு சபையில் முதல் வருடத்தில் இதர தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களான எஸ்டோனியா, வியட்நாம், நைகர், டுனிசியா மற்றும் சென் வின்சன்ட் மற்றும் கிரெனடின்ஸ் ஆகியவற்றுடன் இணைந்திருக்கவுள்ளது.
அதேநேரம் முழுக் காலப் பகுதிக்குமாக அயர்லாந்து, இந்தியா, கென்யா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளுடனும் நோர்வே இணைந்திருக்கவுள்ளது.