பொது வெளியில் முக கவசங்களை அணியாமல் நடமாடுவோருக்கு எதிராக இன்று தொடக்கம் பிசிஆர் அல்லது அன்ரிஜன் சோதனை நடத்தப்படுவதுடன், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று சிறிலங்கா காவல்துறை எச்சரித்துள்ளது.
முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை பின்பற்றத் தவறுபவர்களுக்கு எதிராக இன்று தொடக்கம் கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுகாதார வழிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில், 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.