கனடாவின் கொரோனா விதிமுறைகள் தொடர்பில் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கரிசனை கொள்ளப்பட்டுள்ளதாக சமஷ்டி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் தமது விதிமுறைகளை அமுலாக்குவது குறித்து மீளாய்வு செய்யும் தீர்மானத்தினை இதுவரையில் எடுக்கவில்லை என்றும் சமஷ்டி அரசு குறிப்பிட்டுள்ளது.
கனடியர்களின் பாதுகாப்பு மற்றும் புதிய உருமாறிய கொரோனா தொற்றின் ஆபத்து நிலைமைகளில் கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் சமஷ்டி அரசால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.