ஈரான் முதல்தடவையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை காட்சிப்படுத்தியுள்ளது.
செம்னான் பிராந்தியத்தில் நடைபெற்ற நிகழ்வில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நூற்றிற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வான்வெளியில் இலக்கு வைத்தல், ஏவுகணைகளை பயன்படுத்தி இலக்குகளை அழித்தல், குண்டுகள் மூலம், இலக்குகளை தாக்குவது, போன்ற தாக்குதல் வழிமுறைகள் குறித்தும் ஈரான் சோதனைகளை நடத்திக் காண்பித்துள்ளது.
வடபகுதி கடற்பரப்பில் கடற்படை கலங்கள் மீது ஆளில்லா விமானங்களை செலுத்தி பார்ப்பது போன்ற சோதனைகளும் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவின் தடைகளை மீறி இந்த ஆளில்லா விமானங்களை தயாரித்துள்ளதாகவும், எந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கும் தாங்கள் தயார் என்பதை தமது படையினர் நிரூபிப்பர்கள் எனவும், என ஈரானிய இராணுவத்தின் பிரதி தலைவர் தெரிவித்துள்ளார்.