சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாசவின் அனைத்துலக உறவுகளுக்கான மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இறுதிப் போர் நடந்த போது, ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர பிரதிநிதியாக இருந்த தயான் ஜயதிலக, பின்னர் பிரான்சுக்கான தூதுவராகவும் பணியாற்றியிருந்தார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில், ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட இவர், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், அங்கிருந்து திருப்பி அழைக்கப்பட்டிருந்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்திருந்த நிலையிலேயே தயான் ஜயதிலக, எதிர்க்கட்சித் தலைவரின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.