சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் மேற்கு பகுதியில் ரக்கா நெடுஞ்சாலையில் சென்ற கொண்டிருந்த 3 பேருந்துகள் மீது பயங்கரவாதிகள், கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர் என்றும் மேலும் பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன..
இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
சம்பவம் நடந்த இடத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.