கொரோனா தொற்றில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களை பாதுகாக்க வேண்டியதன் நிமிர்த்தம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அல்லது பிணையில் விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணையாளர்களாக இருப்பதற்கு நாம் தயாராக உள்ளோம் எனவும் அவர் கூறினார்.
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டு அதனால் நாட்டில் இத்தனை தாக்கங்கள் ஏற்பட ஜனாதிபதியே பிரதான காரணமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதார துறையினர் கையாள வேண்டிய விடயங்களை இராணுவத்திடம் ஒப்படைத்தமையினாலேயே அனைத்தும் பிழைத்தது என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று தொழில் அமைச்சின் கீழ் வரும் கடை, அலுவலக ஊழியர், பெண்களையும் இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல், குறைந்தபட்ச வேதனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் (திருத்தச்) சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.