மாலியின் மத்திய பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் திருமண நிகழ்வு ஒன்றின் மீது நடத்தப்பட்டுள்ள விமானத் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை உலங்குவானூர்தி ஒன்றே இந்த தாக்குதலை நடத்தியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள பிரெஞ்சுப் படையினர், தாங்கள் மத்திய மாலியில் ஜிகாதி பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும்,ஆனால் திருமண நிகழ்வின் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும் கூறியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னதாக இரண்டு வேறு குண்டுத் தாக்குதல்களில் மாலியின் மத்திய பகுதிகளில் ஐந்து பிரெஞ்சுப் படையினர் உயிரிழந்தனர்.
இதையடுத்தே, குறித்த பகுதியில் ஜிகாதி பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரெஞ்சு இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.