யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுழைவாயிலில் நேற்றுமுன்தினம் தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள், தமது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா நேற்று மாலை மாணவர்களுக்கு நீராகாரம் கொடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக, தண்டனை விதிக்கப்பட்ட மாணவர்களே, தம்மைத் தண்டனைகளில் இருந்து நிபந்தனையற்ற முறையில் விடுவிக்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.