அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு ஈராக் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல்படையின் தளபதி சுலைமானி கடந்த ஆண்டு ஜனவரி 3-ம் திகதி பாக்தாத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் குண்டுவீசி கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக டிரம்பிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஈராக்கின் நீதித்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலை விசாரிக்கும் பாக்தாத்தின் விசாரணை நீதிமன்றம் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.