கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றபோதும் இந்த விடயத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் முன்வைத்துள்ள கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
உலகின் ஏனைய நாடுகளும் அதனை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் தானும் அதனை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.