சிறிலங்கா – இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் இந்தியாவின் அக்கறை வெளிப்படுத்தப்பட்டிருந்தது எனவும் தெரிவித்தார்.
சிறிலங்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிகார அமைச்சருக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.