ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜோ பைடன் வெற்றி பெற்றிருந்த போதும், ஜனாதிபதி ட்ரம்ப், தனது தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து வந்தார்.
இந்த நிலையில் ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகளை, அமெரிக்க நாடாளுமன்றம் மேற்கொண்டிருந்தது.
தேர்தலில் வென்ற மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்குகளை முத்திரையிட்ட உறையில் அனுப்பி வைத்தனர்.
அந்த வாக்குகள் எண்ணப்படுவதற்காக கப்பிடல் கட்டடத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்ட போது, ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
சுமார் 6 மணி நேரத்திற்கு பின்னர் நாடாளுமன்ற கட்டடத்தை காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை அடுத்து, வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
இதன் முடிவில் ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து சான்றளித்துள்ளார்.
இதையடுத்து, வரும் 20ம் திகதி அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார்.