பொலிவியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 6 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிவியாவின் சுக்ரே (Sucre) நகரில், அரை மணிநேரம் கொட்டிய ஆலங்கட்டி மழையைத் தொடர்ந்து, திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வீதிகளில் ஆறுபோலப் பாய்ந்த வெள்ளத்தில், பேருந்துகள், வாகனங்கள், தற்காலிக கூடாரங்கள், என்பன அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 3 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிவிய உள்துறை அமைச்சர், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.