பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, இம்மாத இறுதியில் விடுதலை செய்யப்படவுள்ளார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
சசிகலாவுக்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் முன்னிலையான சசிகலா தரப்பு சட்டத்தரணி, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா வரும் ஜனவரி 27ஆம் திகதி விடுதலை ஆவதால் வழக்கு பற்றி அவரிடம் விளக்கம் பெற்று பதிலளிக்க வேண்டி இருப்பதால், காலஅவகாசம் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
சட்டத்தரணியில் இந்த வாதத்திலேயே சசிகலா ஜனவரி 27ஆம் திகதி விடுதலையாக உள்ள தகவல் வெளியாகியுள்ளது.