அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைத் தொடர்ந்து, வொஷிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் மூடப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்களை அடுத்து, அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், வொஷிங்டனில் ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போதைய சூழ்நிலைகள் காரணமாக ஜனவரி 10ஆம் நாள் வரை சிறிலங்கா தூதரகம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவசர தேவைகளுக்காக தொடர்பு கொள்வதற்கான, தொலைபேசி, மின்னஞ்சல் விபரங்களையும், சிறிலங்கா தூதரகம் வெளியிட்டுள்ளது.