ஒன்ராரியோவில் எதிர்வரும் 11ஆம் திகதி பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தெற்கு ஒன்ராரியோவில் 25ஆம் திகதி வரையில் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
மேலும், இணைவழி கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள மாணவர்களை மிண்டும் வகுப்பறை கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஒன்ராரியோ கல்வித்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, பாடசாலைகளை மீளத்திறப்பதற்கு முன்னதாக கொரோனா தொற்றுப் பரவல் நிலைமைகளை முழுமயாக ஆய்வு செய்து பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டுமென பெற்றோர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. மேலும், சில பாடசாலைகளில் புதிய முறைமையில் வகுப்பறைகள் மாற்றியமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.