சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பி.சி.ஆர் சோதனையின் போது, நேற்றிரவு தமக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதனையடுது ஹிக்கடுவ பகுதியில் உள்ள விடுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில், சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு நாட்களாக நீடித்த காய்ச்சலை அடுத்து, தாம் பி.சி.ஆ.ஆர் சோதனை செய்து கொண்டதாகவும், அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
எனினும், தாம் நாடாளுமன்ற அமர்வுகளிலோ, ஏனைய பொது நிகழ்வுகளிலோ சில நாட்களாக பங்கேற்கவில்லை என்றும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.