சிறிலங்காவுக்கு இந்தியா யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியுமே தவிர, உத்தரவிட முடியாது என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
“13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வற்புறுத்துவதற்கு இந்தியாவுக்கு எந்த உரிமையும் கிடையாது.
சிறிலங்கா ஒரு சுயாதீனமான நாடு என்ற வகையில், இந்தியா யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்
அதற்கு மாறாக சிறிலங்காவுக்கு எந்ததொரு விடயத்திலும் உத்தரவிட முடியாது” என்றும், அவர் மேலும் கூறியுள்ளார்.