உடுவில்- அம்பலவாணர் வீதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொருக்கி அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வயோதிபப் பெண்ணும் அவரது மகனும் வசிக்கும் வீட்டிலேயே நேற்று இரவு 9.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
5 உந்துருளிகளில் சென்ற 10 பேர், முகத்தை மூடிக் கட்டியவாறு வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான இலத்திரனியல் சாதனங்கள் உள்ளிட்ட உடமைகளைத் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக, சுன்னாகம் காவல்துறையினருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்ட போது, சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே அவர்கள் அங்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.