அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என விழித்தமைக்காக இவன்கா டிரம்ப் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளார்.
இவன்கா தனது கீச்சகப்பதிவில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை ‘தேசப்பற்றாளர்கள்’ என குறிப்பிட்டதோடு அவர்களை வன்முறையில் ஈடுபடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்க தேசப்பற்றாளர்களே பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறும் நடவடிக்கைகளோ அல்லது எங்கள் சட்ட அமுலாக்களை அவமதிப்பதோ ஏற்றுக்கொள்ள முடியாதது என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு கடும் எதிர்ப்புக்கள் எழுந்ததை அடுத்து பதிவினை சற்று முன்னர் நீக்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





