சிறிலங்கா வான்படை 12 வானூர்திகளைப் புதுப்பிப்பதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வான்படை வானூர்திகளை புதுப்பிக்கும் திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை 49 மில்லியன் டொலரை வழங்க அனுமதி அளித்துள்ளது,
இதையடுத்து, வான்படையின் 5 கிபிர் போர் வானூர்திகளை இஸ்ரேலுக்கு அனுப்பி பழுதுபார்த்து, புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் இந்த மாதத்துக்குள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், சி-130 வானூர்திகள் இரண்டை, இஸ்ரேலுக்கும், ஒரு வானூர்தியை பாகிஸ்தானுக்கும் அனுப்பி புதுப்பிக்கவும் சிறிலங்கா வான்படை திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே அன்ரனோவ்-32 ரக வானூர்திகள் மூன்று, உக்ரேனுக்கு புதுப்பிப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும், மூன்று எம்.ஐ. 17 உலங்கு வானூர்திகள் லிதுவேனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பல எம்.ஐ-35 தாக்குதல் உலங்குவானூர்திகளையும், புதுப்பிப்பதற்கான உக்ரேனுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.