ஒன் ராரியோவில் ஆரம்ப பாடசாலை வயதுடைய குழந்தைகள் மத்தியில், கொரோனா தொற்று வீதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, 4 தொடக்கம் 11 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகள் மத்தியில், கொரோனா தொற்று வீதம் திடீரென அதிகரித்துள்ளதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
நவம்பர் 29ஆம் நாளுடன் முடிந்த வாரத்தில், 5.22 வீதமாக இருந்த குழந்தைகள் மத்தியிலான தொற்று, டிசெம்பர் 29ஆம் நாள் முடிந்த வாரத்தில் 15.66 வீதமாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, 12 தொடக்கம் 13 வயதுக்கிடைப்பட்ட குழந்தைகள் மத்தியிலான தொற்றும் அதனை விட, அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு நொவம்பர் இறுதியில் 5.22 வீதமாக இருந்த கொரோனா தொற்று, டிசம்பர் இறுதியில் 20 வீதமாக அதிகரித்துள்ளது என்றும் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.





