கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நாடளாவிய ரீதியில் உள்ள இணக்க சபைகளின் நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சுகாதார விதிமுறைகளுக்கு அமைய முறைப்பாடுகளை விசாரணை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக எவ்வாறு செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பிலான உரிய ஆலோசனைகள் இணக்க சபையுடன் தொடர்புடைய தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.